உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவர் கோவிலில் சிறப்பு பூஜை

தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவர் கோவிலில் சிறப்பு பூஜை

கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அருகே, தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, காலபைரவர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. போச்சம்பள்ளி அடுத்த அண்ணாமலைப்புதூர் மல்லிக்கல்லில், 150 அடி உயரமுள்ள மலை உச்சியில், 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கால பைரவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாத தேய்பிறை அஷ்டமியில், சிறப்பு பூஜை நடக்கும். அதன்படி, நேற்று காலபைரவருக்கு அஷ்ட லட்சுமி யாகம், குபேர யாகம், தனகார்ஷன அதிருத்ரயாகம் உட்பட பல்வேறு யாகங்கள் நடந்தன. தொடர்ந்து காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை, வேத பாராயணம், சிறப்பு பூஜையும், மங்கல ஆரத்தியும் நடந்தது. இதையடுத்து, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு கால பைரவர் அருள் பாலித்தார். இந்த சிறப்பு வழிபாட்டில், சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !