சோமநாதேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம்: பக்தர்கள் பரவசம்
ADDED :3035 days ago
சேலம்: சோமநாதேஸ்வரர் கவுரி அம்மன் திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடந்தது. சேலம், நாமமலை, பஞ்சமுக சோமநாதேஸ்வரர் ஆசிரமத்தில் இருந்து, சோமநாதேஸ்வரர் - கவுரி அம்மன் உற்சவ சிலை, வாகனம் மூலம், பட்டைக்கோவில் அருகே, வசந்த மண்டபத்துக்கு, நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு கொண்டுவரப்பட்டது. காலை, 7:00 மணிக்கு சங்காபிஷேகம், 10:00 மணிக்கு, சுவாமிகளுக்கு சிவாச்சாரியார்களால் திருக்கல்யாணம் செய்து வைக்கப்பட்டது. தொடர்ந்து, திருவிளக்கு பூஜை, அன்னதானம் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு சுவாமி திருவீதி உலா நடந்தது. அதில், ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.