உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடிப்பெருவிழா துவக்கம்

ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடிப்பெருவிழா துவக்கம்

குன்னுார் : குன்னுாரில் உள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், ஆடிமாத பெருவிழா வரும், 21ம் தேதி துவங்குகிறது. அன்று காலை, 11:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார மகா தீபாராதனை நடக்கிறது. ஆடி அமாவாசை தினமான, 23ம் தேதி அம்மன் அவதரித்த நாளில் சிறப்பு அபிஷேக அலங்காரம் நடக்கிறது. விழாவில், வெள்ளிதோறும், லலிதா சகஸ்ரநாம குங்கும அர்ச்சனை நடத்தப்படுகிறது. ஏற்பாடுகளை அர்ச்சகர் குணா சாஸ்திரி மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !