விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர உற்சவம் துவக்கம்
ADDED :3083 days ago
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில், விருத்தாம்பிகை அம்மன் சன்னதியில் ஆடிப்பூரம் திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் ஆடிப்பூரம் திருக்கல்யாணத்தை முன்னிட்டு, விருத்தாம்பிகை அம்மன் சன்னதியில் காலை விநாயகர், விருத்தாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, பகல் 11:00 மணியளவில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து தினசரி பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, ஊர்வலம் நடக்கிறது. 25ம் தேதி காலை 5:30 மணியளவில் தேரோட்டம், 27ம் தேதி அதிகாலை 4:30 மணிக்கு மேல் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.