திருப்பரங்குன்றம் தெப்பக்குளத்தை தூய்மைப்படுத்த கமிஷனர் உத்தரவு
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் ஜி.எஸ்.டி., ரோட்டிலுள்ள தெப்பக்குளத்தை தூய்மைப்படுத்தவும், நிரந்தரமாக தண்ணீர் தேக்கவும், அறநிலைய துறை கமிஷனர் சந்திரகுமார் உத்தரவிட்டார்.தென்பரங்குன்றத்தில் சுற்றுலாத் துறை மூலம் ரூ. 3 கோடி 87 லட்சத்து 63 ஆயிரத்தில் நடக்கும் "ஈகோ பார்க் பணிகளை கமிஷனர் பார்வையிட்டார். தெப்பக்குளத்தை ஆய்வு செய்த கமிஷனர், மைய மண்டபத்தை சீரமைக்கவும், தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வரும் வழியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் உத்தரவிட்டார். கோயில் துணை கமிஷனர் செந்தில் வேலவன், உதவி கோட்ட பொறியாளர் சிவமுருகானந்தம், மாவட்ட சுற்றுலா அலுவலர் தர்மராஜ் உடன் சென்றனர். "ஈகோ பார்க்கில் வைக்கப்பட்டிருந்த சிறுவர்கள் விளையாட்டு சாதனங்களை, மக்கள் பயன்படுத்தி விடாக்கூடாது என்பதற்காக அவற்றின்மீது முட்களை போட்டு வைத்திருந்தனர். கமிஷனர் வருவதற்காக அந்த முட்கள் அகற்றப்பட்டு அழகுப்படுத்தபட்டன.