உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தூங்காதே தம்பி தூங்காதே - எழுப்புகிறார் வள்ளலார்

தூங்காதே தம்பி தூங்காதே - எழுப்புகிறார் வள்ளலார்

*  குறைந்த நேரமே தூங்க வேண்டும். தூக்கத்தைக் கட்டுப்படுத்தினால் புத்துணர்ச்சி கிடைக்கும். யோக முறைகளில் மிகவும் சிறந்தது விழித்திருப்பது தான்.
* பசித்திரு, தனித்திரு, விழித்திரு என்பது உங்கள் தாரக மந்திரமாகட்டும். பசித்திரு என்பதன் அர்த்தம் சாப்பிடாமல் இரு என்பதல்ல. கடவுளைக் காண வேண்டும். அவரது திருவடிகளை அடைய வேண்டும் என்கிற அருள் பசி உங்களுக்குள் இருக்கட்டும்.
* தனிமையில் அமரும் போது மனதில் அலாதியான இன்பம் பிறக்கும். நம்மைப் பற்றிய சுயமதிப்பீட்டுக்கு சரியான காலம், தனிமை நேரம் தான்.
* தனிமையில் இருக்கும் போது எந்த ஆபத்து வந்தாலும், நாம் தனித்தே சமாளிக்க வேண்டும். அப்போது மனோபலமும் உறுதியும் தானாகவே கிடைத்து விடும்.
* தீயவற்றை பார்க்காமல் இருக்கவும், பிறரது நிந்தனையில் இருந்து தப்பிக்கவும், எடுத்த செயலை நல்ல மனதுடனும், உற்சாகத்துடனும் செய்து முடிக்கவும் தனிமை உதவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !