உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவள்ளூர் முருகன் கோவில்களில் கிருத்திகை வழிபாடு

திருவள்ளூர் முருகன் கோவில்களில் கிருத்திகை வழிபாடு

திருவள்ளூர்: கிருத்திகையை முன்னிட்டு, முருகன் கோவில்களில், நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. ஆடி மாதத்தில், இரண்டு கிருத்திகை உள்ளது. முதல் கிருத்திகையான நேற்று, திருவள்ளூரில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது. திருவள்ளூர், தீர்த்தீஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர், சிவ - விஷ்ணு கோவிலில் உள்ள சுப்ரமணியர், ஜெயா நகர், வல்லப வினாயகர் கோவிலில் உள்ள சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.புல்லரம்பாக்கம் வள்ளி தேவசேனா சமேத முத்துகுமார சுவாமி கோவில் ஆகிய கோவில்களில், முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !