காஞ்சிபுரம் கைலாசநாதர் மண்டலாபிஷேகம் நிறைவு விழா
ADDED :3105 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம் முடிந்து, தொடர்ந்து மண்டலாபிஷேகம் நடந்து வந்தது. அதன் நிறைவு விழாவில் நேற்று, மூலவருக்கு, 108 கலசாபிஷேகம் நடந்தது. காஞ்சிபுரத்தில் சிறப்புற்று விளங்கும், கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த, 5ல் விமரிசையாக நடந்தது. தொடர்ந்து, தினமும் மண்டலாபிஷேகமும் நடந்து வந்தது. நேற்றுடன், 45வது நாள் பூர்த்தியடைந்து, மண்டலாபிஷேகம் நிறைவு பெற்றது. அதையொட்டி, 108 கலசங்கள் வைத்து ஹோமம் நடந்தது. இரவு, 7:00 மணிக்கு, பர்வதவர்த்தினி அம்பாளுடன் கைலாச நாதர் வீதிவுலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.