எருமை மாடுகளை பலியிட்டு நரிக்குறவர்கள் சிறப்பு பூஜை
ADDED :3006 days ago
விழுப்புரம்: விழுப்புரம் அருகே நரிக்குறவர்கள் மழை வேண்டி, எருமை மாடுகளை பலியிட்டு, வழிபாடு செய்தனர். விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நரிக்குறவர்கள் பலர் தங்களின் குடும்பத்தாரோடு வசித்து வருகின்றனர். இவர்கள், விக்கிரவாண்டி அருகே உள்ள பனையபுரம் கிராமத்தில் நேற்று முன்தினம் கொட்டகை அமைத்து, காளி உள்ளிட்ட குலதெய்வங்களை வைத்து வழிபட்டனர். முன்னதாக 2 எருமை மாடுகள், 5 ஆடுகளை பலியிட்டு, சிறப்பு பூஜைகள் செய்தனர்.