உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அமர்நாத் யாத்திரை:ஒரே நாளில் 4650 பேர் தரிசனம்

அமர்நாத் யாத்திரை:ஒரே நாளில் 4650 பேர் தரிசனம்

ஸ்ரீநகர்: அமர்நாத் பனி லிங்கத்தை நேற்று(ஜூலை-21) மட்டும் 4650 யாத்ரீகர்கள் தரிசனம் செய்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.ஜம்மு காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள். இந்த ஆண்டு தரிசனத்தையொட்டி யாத்ரீகர்களின் முதல் குழுவினர் கடந்த 28ம் தேதி பயணத்தை தொடங்கினர். முதல் நாளாக 2,280 யாத்ரீகர்கள் மலையடிவாரத்தில் இருந்து அமர்நாத் ஆலயத்துக்கு புறப்பட்டு சென்றனர்.இந்நிலையில், யாத்திரையின் 21வது நாளான நேற்று 4650 பேர் பனி லிங்கத்தை தரிசித்துள்ளதாக யாத்திரைக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !