உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜம்பெரும் நாடக விழாவில் இன்று’ஸ்ரீ தியாகராஜர்’ நாடகம்

ஜம்பெரும் நாடக விழாவில் இன்று’ஸ்ரீ தியாகராஜர்’ நாடகம்

மதுரை, மதுரை சத்குரு சங்கீத சமாஜத்தில், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் ’ஐம்பெரும் நாடக விழா’ நடந்து கொண்டிருக்கிறது. விழாவில் நேற்று பூவை மணி எழுத்தில், ராஜாராம் இயக்கத்தில் பல விருதுகளை வென்ற ’உறவோடு விளையாடு’ நாடகம் நடந்தது. இந்நாடகத்தில் நடிகர்கள் கவுதமி, கிரீஷ் மிக இயல்பாக நடித்து ரசிகர்களின் கைதட்டலை பெற்றனர். தினமும் வலம் வரும் நாடகங்களின் வரிசையில், சென்னை யுனைடெட் விஷூவல்ஸ் வழங்கும், ’டிவி’ வரதராஜன் குழு நடிக்கும் ’ஸ்ரீ தியாகராஜர்’ நாடகம் இன்று (ஜூலை 22) மாலை 6:30 மணிக்கு நுாறாவது முறையாக அரங்கேறுகிறது. வி.எஸ்.வி., எழுத்தில், பாம்பே ஜெயஸ்ரீயின் இசையில் ஆன்மிகம் மணம் பரப்பும் காட்சிகளை கண்டு ரசிக்கலாம். அனுமதி இலவசம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !