நயினார் கோவிலுக்கு பாதயாத்திரை
ADDED :3040 days ago
பரமக்குடி, பரமக்குடி அருகே நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக சென்றனர். மூர்த்தி, தீர்த்தம், தலம் என்ற சிறப்புகள் கொண்ட நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயிலுக்கு, ஆண்டு முழுவதும் பக்தர்கள் தங்களது தோஷ நிவர்த்திக்காக பூஜை செய்வது வழக்கம். இதே போல் ஆடி வெள்ளிக்கிழமைகளில் பரமக்குடியில் இருந்து 12 கி.மீ., தொலைவில் உள்ள நயினார்கோவிலுக்கு திருமண தடை நீங்கவும், குழந்தை பேறு வேண்டியும், தோஷ நிவர்த்திக்காகவும் ஏரளாமானோர் பாதயாத்திரை சென்றனர்.