உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொன்னேரி அகத்தீஸ்வரர் கோவிலில் உழவார பணி

பொன்னேரி அகத்தீஸ்வரர் கோவிலில் உழவார பணி

பொன்னேரி: அகத்தீஸ்வர கோவிலில், நமச்சிவாய உழவார படையின் மூலம், கோவிலிலை சுத்தப்படுத்தி வர்ணம் தீட்டும் உழவார பணிகள் நடைபெற்றன.சென்னை, நமச்சிவாய உழவாரப்படை அமைப்பைச் சேர்ந்தவர்கள், இந்து கோவில்களை சுத்தம் செய்யும் இறைப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று, இந்த அமைப்பினர், பொன்னேரி, ஆனந்தவல்லி அம்மை வலம்கொண்ட அகத்தீஸ்வரர் கோவிலில் உழவாரப் பணிகளை மேற்கொண்டனர்.இது அந்த அமைப்பின், 186வது உழவாரப் பணியாகும். கோவில் வளாகத்தில் இருந்து புல், பூண்டு செடிகளை வெட்டி எடுத்தனர். குப்பை மற்றும் கழிவுகளை அள்ளி குவித்தனர். ஆனந்தபுஷ்கரணி திருக்குளத்தில் இருந்து பிளாஸ்டிக் குப்பை மற்றும் பேப்பர் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்தனர்.கோவில் சுவர்களுக்கு புதிய வர்ணம் தீட்டினர். பெண்கள், கோவிலில் பூஜைக்கு பயன்படுத்தும், பாத்திரங்களை சுத்தம் செய்தனர். உழவாரப் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களுக்காக, அங்கேயே சமையல் செய்யப்பட்டன. சுவாமி வாகனங்களை சுத்தம் செய்தல், வஸ்திரங்களை சுத்தம் செய்தல், சுற்று பிரகாரம் செடி கொடிகளை அகற்றுதல் என, குழு குழுவாக உழவார பணிகளை மேற்கொண்டனர். இதில், 150க்கும் மேற்பட்டோர் உழவார பணிகள் முடிந்து, மாலை, 4:00 மணிக்கு கூட்டு வழிபாடு நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !