உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாசாணியம்மன் கோவிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு

மாசாணியம்மன் கோவிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு

ஆனைமலை : ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நேற்று, ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடு நடந்தது. பொள்ளாச்சி அடுத்த, ஆனைமலை மாசாணியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. கோவிலுக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அதிகளவிலான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசிக்கின்றனர். ஆடி அமாவாசை நாளான நேற்று, மதுரை, பழனி, திருப்பூர், கோவை உள்ளிட்ட இடங்களில் இருந்தும், உள்ளூர் பக்தர்களும் காலை முதலே கோவிலுக்கு வந்தனர். அம்மனுக்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடத்தது. பல்லாயிரக்கணக்கானோர் அம்மனை தரிசிக்க வந்ததால், மெயின் ரோட்டில் ஒரு கி.மீ., தொலைவுக்கு வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. போக்குவரத்து ஒழுங்குபடுத்தவும், கோவில் வளாகத்தில் பாதுகாப்பு பணியிலும் போலீசார் ஈடுபட்டனர். பக்தர்கள் வசதிக்காக, உடுமலை, கோவை, பொள்­ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆனைமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !