ஆதி சுயம்பு ஈஸ்வரர் அபிராமி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை
ADDED :3038 days ago
திண்டுக்கல்: ஆவிளிப்பட்டி ஆதி சுயம்பு ஈஸ்வரர் அபிராமி அம்மன் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. நிர்வாகி உதயகுமார் சிவாச்சாரியரால் பித்ருக்களுக்கு யாகம், தர்ப்பணம் கொடுக்கப்பட்டது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாரதனை செய்யப்பட்டது. ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அர்ச்சகர் வீரசபரி செய்தார்.