வெளிநாடு கடத்த இருந்த ஐம்பொன் சிலைகள் பறிமுதல்: 5 பேர் கைது
ADDED :3037 days ago
கும்பகோணம்: குடந்தை அருகே காரை மடக்கி சோதனையிட்ட போலீசார், பல லட்சம் மதிப்புள்ள 3 ஐம்பொன் சிலைகளைப் பறிமுதல் செய்தனர். அவற்றை கடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சிலை கடத்தலில் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த முக்கியப் புள்ளி ஒருவருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இருந்து தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திற்கு சிலைகள் கடத்தி வரப்படுவதாக கும்பகோணம் போலீசாருக்கு நேற்று (ஜூலை23) இரவு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து கும்பகோணம் டிஎஸ்பி கணேசமூர்த்தி தலைமையில் போலீசார், இரவில் பல்வேறு இடங்களில் வாகன தணிக்கை நடத்தினர். இதில் சிலைகளை கடத்தி வந்த திருச்சியை சேர்ந்த குமார், மணி, தேவகோட்டை மணி, அரியலூர் மனோ, கடலூர் விஸ்வசுந்தரம் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்து காரையும் பறிமுதல் செய்தனர்.