திருக்கச்சியம்பதி விநாயகர் மண்டலாபிஷேகம் நிறைவு
ADDED :3037 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், திருக்கச்சியம்பதி விநாயகர் கோவிலில், மண்டலாபிஷேகம் நிறைவு விழாவையொட்டி, நேற்று முன்தினம், 108 சங்காபிஷேகம் நடந்தது.காஞ்சிபுரம் டி.கே.நம்பி தெருவில், அஷ்டபுஜபெருமாள் அருகில், அரச மரத்தின் கீழ், திருக்கச்சியம்பதி விநாயகர் கோவில் உள்ளது. சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலுக்கு, ஜூன், 4ம் தேதி, கோலாகலமாக கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பின் தொடர்ந்து, தினமும் காலை, 8:00 மணிக்கு, மண்டலாபிஷேகம் நடந்து வந்தது.நிறைவு விழாவான நேற்று முன்தினம், 108 சங்காபிஷேகமும், சிறப்பு ஹோமமும் நடந்தது. மூலவர் விநாயகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.