உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குறிச்சி ஆலயத்தில் வரும் 28ல் வருண ஜபம்

குறிச்சி ஆலயத்தில் வரும் 28ல் வருண ஜபம்

பெத்தநாயக்கன்பாளையம்: வாழப்பாடி அருகே, குறிச்சி தீர்த்தகிரீஸ்வரர் ஆலயத்தில், வரும், 28ல் வருண ஜபம் நடக்கிறது. வசிஷ்ட நதிக்கரையில் அமைந்துள்ள பஞ்சபூத தலங்களைச் சேர்ந்த சிவாச்சாரியார்கள் முன்னிலையில், காலை, 6:00 மணிக்கு மழை வேண்டியும், அனைத்து உயிர்களும் சுபிட்சம் பெறவும், பஞ்சபூத, சப்தரிஷி வேள்வி மற்றும் வருண ஜபம் நடக்கிறது. தொடர்ந்து, சிறப்பு பூஜை, அன்னதானம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை, சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த சிவனடியார்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !