சங்கமேஸ்வரர் கோவில் வருவாய் ரூ.6 லட்சம்
ADDED :3038 days ago
பவானி: சங்கமேஸ்வரர் கோவிலில், ஆடி அமாவாசை நாளில், ஆறு லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்தது. ஈரோடு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக, பவானி சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. ஆடி அமாவாசை நாளான நேற்று முன்தினம், முன்னோருக்கு திதி கொடுத்தல், பிண்டம் விடுதல், காரியம், பரிகாரத்துக்காக ஏராளமானோர் வந்தனர். இதனால், அதிகாலை முதல், இரவு வரை, கூடுதுறையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோவில் நிர்வாகத்தின் கீழ் உள்ள, பைக், கார், வேன், பஸ் பார்க்கிங் மற்றும் அர்ச்சனை சீட்டு, பரிகாரச் சீட்டு உள்ளிட்டவற்றில், ஆறு லட்சம் ரூபாய் வசூலானதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.