உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ’தெவ்வப்பா’ பண்டிகை ேகாலாகலம் - 33 படுகரின கிராம மக்கள் பங்கேற்று பரவசம்

’தெவ்வப்பா’ பண்டிகை ேகாலாகலம் - 33 படுகரின கிராம மக்கள் பங்கேற்று பரவசம்

ஊட்டி : ஊட்டி அடுத்துள்ள கடநாடு, மேலுார் கிராமத்தில், ’தெவ்வப்பா’ பண்டிகையில், திரளான படுகரின மக்கள் பாரம்பரிய உடையில் பங்கேற்று சிறப்பித்தனர். ஊட்டி அடுத்துள்ள கடநாடு கிராமத்தில், ’தொதநாடு சீமெகள்’ என அழைக்கப்படும், அணிக்கொரை, துானேரி, இடுஹட்டி, தும்மனட்டி, மடித்தொரை, கடநாடு உட்பட, 33 கிராம மக்கள் இணைந்து, ஆண்டு தோறும் ’தெவ்வப்பா’ பண்டிகையை நடத்தி வருகின்றனர். நடப்பாண்டுக்கான பண்டிகை கடந்த வெள்ளிக்கிழமை துவங்கியது. இதன் ஒரு பகுதியாக, நேற்று முன்தினம், ஹிரியோடைய்யா கோவிலில் அபிேஷகம், ஆராதனை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மாலை, 5:00 மணியளவில், சீமெ தலைவர்கள் ஒன்று கூடி ஹிரியோடைய்யாவின் தத்துவம் குறித்து பேசினர்.

அன்னதான நிகழ்ச்சி முடிந்ததும், அன்றிரவு கிராமத்தின் மறைவான இடத்திற்கு சென்ற பக்தர்கள், கடந்தாண்டில் வைக்கப்பட்ட தண்ணீர் பானையின் நிலையை ஆராய்ந்த பின், பக்தர்கள் கிராமத்திற்கு திரும்பினர். அப்போது, பக்தர்கள் நடந்து செல்லும் ’பெத்துதடி’ என்ற சப்தத்தை கேட்கும் கிராம மக்கள் பூஜை செய்தனர். பின்பு, கோவிலில் காணிக்கை கட்டி, மடித்தொரை அருகே உள்ள பனகுடிக்கு பக்தர்கள் சென்றனர். அதேபோல, மேலுார் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில், குல தெய்வ பண்டிக்கையான ’தெவ்வப்பா’ வில், ’மண்டே, தண்ட’ என்ற நிகழ்ச்சியில், குழந்தைகளுடன் தம்பதியர் பங்கேற்றனர். கிராம மக்கள் பாரம்பரிய உடை அணிந்து வந்து பண்டிகையை சிறப்பித்தனர். இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், ’தெவ்வப்பா’ பண்டிகையானது ஆண்டுதோறும் நல்ல மழை பெய்ய வேண்டும். தானியங்கள், காய்கறிகள் நன்றாக விளைவதோடு, பொதுமக்கள் நோய்கள் இன்றி வாழ வேண்டும் என்பதற்காக அந்தந்த கிராம படுகரின மக்களால் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பாரம்பரிய உடை அணிந்து நடனமாடி இறைவனை வழிபடுவோம்’ என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !