உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோட்டை மாரியம்மனுக்கு இன்று பூச்சாட்டுதல் விழா

கோட்டை மாரியம்மனுக்கு இன்று பூச்சாட்டுதல் விழா

சேலம்: கோட்டை மாரியம்மன் கோவிலில், இன்று பூச்சாட்டுதல் விழா நடக்கிறது. சேலம், கோட்டை மாரியம்மன் கோவிலில், கருவறை உள்பட, பல்வேறு பிரச்னைகளுக்கு பின், ஆடித்திருவிழா அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த, 21 காலை, 7:00 மணிக்கு, கோவிலில் முகூர்த்தக்கால் நடப்பட்டு விழா தொடங்கியது. அதன் முக்கிய நிகழ்வான பூச்சாட்டுதல் விழா, இன்று இரவு, 8:00 மணிக்கு நடக்கிறது. அதையொட்டி, அதிகாலை முதல், அம்மனுக்கு சிறப்பு அபி ?ஷகம், ஆராதனை நடக்கும். ஆக., 7ல் சக்தி அழைப்பு, 9, 10, 11ல் பொங்கல் வைபவம், 15ல் பால்குட ஊர்வலம், சிறப்பு அபிஷேகம் ஆகியவை நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !