உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளையார்கோவில் சொர்ண வள்ளி அம்மன் கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம்

காளையார்கோவில் சொர்ண வள்ளி அம்மன் கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம்

காளையார்கோவில் சொர்ண வள்ளி அம்மன் கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம் நடை
பெற்றது.ஆடிபூரம் உற்சவவிழா 17 ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்று வருகிறது.

நேற்று காலை 5:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. 5:30 மணிக்கு
அம்மன் தேரில் எழுந்தருளினார். 9:00 மணிக்கு பொதுமக்கள் தேர்வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெற்றது.  

தேவஸ்தான கண்காணிப் பாளர் ராஜேந்திரன், காளீஸ்வரகுருக்கள், ஏஎல்.ஏஆர் அறக்கட்டளை நிர்வாகத்தினர், தேவகோட்டை தி.ராம.தி குடும்பத்தினர், சுப்பிர மணியன் செட்டியார் குடும்பத்தினர் மற்றும் கிராம பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !