தேவகோட்டை கோட்டையம்மன் கோயில் ஆடிச் செவ்வாய் பொங்கல் விழா
ADDED :3038 days ago
தேவகோட்டை கோட்டையம்மன் கோயில் ஆடிச்செல்வாய் விழா நடந்தது. கடந்த 17 ந்
தேதி எல்லையில் உள்ள கோயிலிலிருந்து பிடிமண் எடுத்து வந்து மேடை அமைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து காப்புக்கட்டுதலுடன் ஆடி விழா துவங்கியது. தினமும் பீடத்திற்கு
அனைத்து அபிஷேகங்கள் நடந்தன.கோட்டையம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. நேற்று
புள்ளி பொங்கல் விழாவை முன்னிட்டு பகலில் பொங்கல் வைத்ததை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
ஏராளமானோர் மாவிளக்கு வைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். இன்று முதல் மாலையில் அம்மனுக்கு வெவ்வேறு வகையான பொருட்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட உள்ளது.