விருதுநகரில் ஆடி செவ்வாயில் சிறப்பு வழிபாடு அம்மனுக்கு வளையல் அலங்காரம்
ADDED :3038 days ago
விருதுநகரில் ஆடி செவ்வாயை முன்னிட்டு அம்மன்கோயில்களில் சிறப்புவழிபாடு வளையல் அலங்காரம் நடந்தன.
ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளி நாட்கள் அம்மன் வழிபாடுக்கு உகந்தநாள் என்பதால், கோயில்களில் பக்தர்கள் கூட்டம் இருக்கும். இந்த ஆடியில் நான்கு செவ்வாய், வெள்ளி வருகின்றன. இந்த நாட்களில் காய்கனி, வளையல், சந்தன அலங்காரம் செய்து வழிபடுபவர். விருதுநகர் தேசபந்து மைதானம் அருகே மாரியம்மன்கோயில், வாலசுப்பிரமணியர்கோயில், வெயிலுகந்தம்மன் கோயில்கள் உள்ளன. ஆடி செவ்வாயை முன்னிட்டு நேற்று அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், வழிபாடு நடந்தது. வாலசுப்பிரமணியர்கோயிலில் முருகன், அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. சொக்கநாதர் கோயிலில் அம்மனுக்கு வளையல் அலங்காரம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மன் தரிசனம் செய்தனர்.