உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி கோயில் வின்ச் ல் புதிய பெட்டிகள் பொருத்தும் பணி

பழநி கோயில் வின்ச் ல் புதிய பெட்டிகள் பொருத்தும் பணி

பழநி முருகன் கோயில் இரண்டாம் வின்ச் பராமரிப்பு பணியில், பக்தர்கள் வசதிக்காக
பழநியில் புதிய பெட்டிகள் பொருத்தும் பணி நடக்கிறது.

பழநி முருகன் மலைக்கோயிலுக்கு 8 நிமிடங்களில் செல்லும் வகையில் நாள்தோறும்
மூன்று வின்ச்-கள் இயங்குகின்றன. இதில் இரண்டாம் வின்ச் பராமரிப்பு பணிகளுக்காக
ஜூன் 12 முதல் நிறுத்தப்பட்டுள்ளது. 280 மீட்டர் தூரம் உள்ள தண்டவாள பாதையில்
மரக்கட்டைகள் அகற்றப்பட்டு, அதற்கு பதிலாக புதிய சிமென்ட் ஸ்லீப்பர்களை பொருத்தியுள்ளனர்.

கரூர் பெட்டிகள் பக்தர்கள் வசதிக்காக வின்ச் பெட்டிகள், இருக்கைகள் விஸ்தரிக்கப்பட்டும், ஜன்னல், கதவுகள் உள்ளிட்டவை மாற்றப்பட்டு முற்றிலும் புதியதாக, கரூரில் தயாரிக்கப்பட்டு பழநி வந்துள்ளன. இதனை பொருத்தும் பணிகள் நடக்கிறது. இதேபோல தேய்மான உதிரி பாகங்கள் புதிதாக மாற்றப்பட்டு விரைவில் இரண்டாம் வின்ச் பக்தர்களின் பயன்பாட்டிற்கு வரஉள்ளது.

இணை ஆணையர் செல்வராஜ் கூறுகையில், வின்ச் பராமரிப்பு பணியில் புதிய  பெட்டிகள் பொருத்தப்பட்டு, இருநாட்கள் எடையில்லாமலும், குறிப்பிட்ட அளவு  எடைக்கற்கள் வைத்தும் சோதனை ஓட்டம் நடத்தப்படும். பாதுகாப்பான பயணம்  உறுதிசெய்தபின், பக்தர்களின் பயன்பாட்டுக்காக ஆக.,31க்குள் இயக்க உள்ளோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !