உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோழவந்தான் பிரளயநாதர் கோயிலில் ராகு, கேது பெயர்ச்சி யாகம்

சோழவந்தான் பிரளயநாதர் கோயிலில் ராகு, கேது பெயர்ச்சி யாகம்

சோழவந்தான்: சோழவந்தான் பிரளய நாதர் சுவாமி சிவன் கோயிலில் நாளை (ஜூலை 27) மாலை ராகு,கேது பெயர்ச்சி விழா நடக்கிறது. ராகு சிம்ம ராசி யிலிருந்து கடக ராசிக்கும், கேது கும்ப ராசியிலிருந்து மகர ராசிக்கும் 27-ம் தேதி மதியம் 12:50 மணிக்கு பெயர்ச்சியாகிறார்கள். இதை முன்னிட்டு, இக் கோயிலில் மாலை 5:00 மணிக்கு மகா யாகம் நடக்கிறது.

அனைத்து ராசிக்காரர்களுக்கும் பரிகார பூஜை மற்றும் அர்ச்சனை நடக்கிறது. ஏற்பாடுகளை எம்.வி.எம். குழும தலைவர் எம்.மணி, பள்ளித் தாளாளர் டாக்டர் மருதுபாண்டியன், நிர்வாக அதிகாரி லதா ஆகியோர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !