பழநி முருகன்கோயில் உண்டியலில் ரூ.1.88 கோடி வசூல்
ADDED :3345 days ago
பழநி:பழநி முருகன்கோயில் உண்டியலில், 26நாட்களில் ரூ. ஒருகோடியே 88 லட்சத்து 73 ஆயிரம் வசூலாகியுள்ளது.பழநி மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் எண்ணிக்கை நடந்தது. அதில் தங்கம்- 954 கிராம், வெள்ளி- 9,985 கிராம், வெளிநாடுகளின் கரன்சிகள் -821, ரொக்கமாக ரூ. ஒரு கோடியே 88 லட்சத்து 73 ஆயிரத்து 933 கிடைத்துள்ளது.
தங்கம், வெள்ளியில் செய்த வேல், ஆள்உருவம், பாதம் உள்ளிட்ட பொருட்களை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். இணை ஆணையர் செல்வராஜ், திண்டுக்கல் உதவி ஆணையர் சிவலிங்கம், கோயில் பணியாளர்கள், வங்கிப்பணியாளர்கள், மாணவர்கள் உட்பட பலர்பங்கேற்றனர்.