உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை சீசனுக்காக குமுளி மலைப்பாதையை ஒருவழி பாதையாக மாற்ற முடிவு!

சபரிமலை சீசனுக்காக குமுளி மலைப்பாதையை ஒருவழி பாதையாக மாற்ற முடிவு!

கூடலூர் : சபரிமலை சீசனுக்காக குமுளி மலைப்பாதையை ஒரு வழிப்பாதையாக மாற்றமுடிவு செய்யப்பட்டது.ச தேக்கடி வன அலுவலகத்தில் எஸ்.பி.,க்கள் பிரவீண்குமார் அபினபு(தேனி), ஜார்ஜ் வர்கீஸ்(இடுக்கி) தலைமையில் இரு மாநில போலீசாரின் ஆலோசனை கூட்டம் நடந்தது.கூட்ட முடிவுகள்: டிச., 15 முதல் ஜன.,15 வரை சபரிமலைக்கு செல்லும் வாகனங்கள் கம்பம் மெட்டு வழியாகவும், சபரிமலையில் இருந்து திரும்பும் வாகனங்கள் குமுளி மலைப்பாதை வழியாகவும் செல்ல வேண்டும்.

*தேனி மற்றும் இடுக்கி மாவட்டத்தில் வாகனங்கள் செல்லும் வழிகளில் சபரிமலை தொடர்பான வரைபடங்கள் பக்தர்களுக்கு வழங்கப்படும்.
* குமுளி, கம்பம் மெட்டு, லோயர்கேம்பில் மருத்துவ குழுவுடன் ஆம்புலன்ஸ் தயார்நிலையில் வைக்கப்படும்.
* குமுளி மலைப்பாதையில் உள்ள ஆபத்து நிறைந்த வளைவுகளில் மின்விளக்கு வசதி செய்து தரப்படும்.
*பழுது ஏற்படும் வாகனங்களை சீரமைக்க மொபைல் சர்வீஸ் ஏற்படுத்தப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !