உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்போரூரில் ஆடிப்பூர விழா கோலாகலம்

திருப்போரூரில் ஆடிப்பூர விழா கோலாகலம்

திருப்போரூர்: ஆடிப்பூர நாளான நேற்று, பாலாம்பிகை அம்மனுக்கு பால் குடம் எடுத்து பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். திருப்போரூரில் உள்ள பிரசித்தி பெற்ற பிரணவ மலையில் பாலாம்பிகை உடனுறை கைலாசநாதர் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் ஆடிப்பூர விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதுபோல, நேற்றும் விழா சிறப்பான முறையில் நடைபெற்றது. இதில், பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற குடங்களில் ஊர்வலமாக கொண்டு வந்த பாலில், பாலாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !