விஸ்வநாதசுவாமி கோயில் ஆடித்தபசு விழா கொடியேற்றத்துடன் துவங்கியது
சிவகாசி, சிவகாசி விஸ்வநாதசுவாமி கோயில் ஆடித்தபசு விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோயிலில் ஆடிதபசு திருவிழா ஜூலை 25 காலை நாட்கால் செய்ய, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. பட்டர் சுப்பிரமணியன் தலைமையில் அர்ச்சகர்கள் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். சிவதொண்டர்களின் மேளதாளத்துடன் கொடியேற்றம் நடந்தது. செயல் அலுவலர் சுமதி, அலுவலர் முருகன் உடன் இருந்தனர். ஆக. 10 ல் உற்சவ சாந்தியுடன் 15 நாள் விழா நிறைவு பெறுகிறது. தினமும் சுவாமி புறப்பாடு, ரிஷப, காமதேனு வாகனங்களில் வீதி உலா, ஆக., 4ல் சட்டத்தேரோட்டம் நடக்கிறது. ஆக., 5 ல் தீர்த்தவாரி உற்சவம்,ஆக 6 ல் தெற்கு ரதவீதியில் விஸ்வநாதர் ரிஷப வாகனத்தில் விசாலாட்சி அம்பாளுடன் தபசு காட்சி அளிக்கிறார். தினமும் சுவாமி அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.