குமரி பகவதி அம்மன் கோயிலில் ஜூலை 31ல் களப பூஜை துவக்கம்
ADDED :2995 days ago
நாகர்கோவில்: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் ஆடி களப பூஜை ஜூலை 31-ம் தேதி தொடங்கி 12 நாட்கள் நடக்கிறது. இதையொட்டி அன்று தங்கக் குடத்தில் சந்தனம், களபம், பச்சை கற்பூரம், ஜவ்வாது, கோராசனை, பன்னீர் போன்ற வாசனை திரவியங்களை அரைத்து கலசத்தில் நிறைத்த பின்னர் தந்திரி சங்கரநாராயணரரு சிறப்பு பூஜை செய்வார். தொடர்ந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படும். 31-ம் தேதி முதல் 12 நாட்கள் தினமும் காலை 10 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. 12 நாள் களபபூஜை முடிந்த மறுநாள் ஆக.,12-ம் தேதி கோயில் வெளி பிரகார தெற்கு மண்டபத்தில் அதிவாசஹோமம் நடக்கிறது. இதில் வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.