முனீஸ்வரர் கோயில் மண்டல பூஜை
ADDED :3051 days ago
கொடைக்கானல், கொடைக்கானல் அப்சர்வேட்டரி புதுக்காடு தர்ம முனீஸ்வரர் கோயிலில் மண்டல பூஜை நடந்தது. இக்கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி 48 வது நாள் மண்டல பூஜை, சிறப்பு யாகசாலை பூஜைகள் நடந்தன. கொடைக்கானல் ஐயப்ப சேவா சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. மாவட்ட தலைவர் அகஸ்தீஸ்வரன், நகர தலைவர் துரைராஜ், இந்து மக்கள் கட்சி பொறுப்பாளர் குமரன், நகர செயலாளர் சக்திதரன் கலந்து கொண்டனர்.