வாயுலிங்கேஸ்வரர் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.67.56 லட்சம்
ADDED :3331 days ago
நகரி: வாயுலிங்கேஸ்வரர் கோவில் உண்டியலில், 67.56 லட்சம் ரூபாய் ரொக்கம், 296 கிலோ வெள்ளியை, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். சித்துார் மாவட்டம், காளஹஸ்தி, வாயுலிங்கேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கடந்த, 15 நாட்களில், பக்தர்கள் உண்டியல்களில் அளித்த காணிக்கை, கோவில் அதிகாரி பிரம்மரம்பா முன்னிலையில், கோவில் ஊழியர்களால் எண்ணப்பட்டது. இதில், 67 லட்சத்து. 56 ஆயிரத்து, 643 ரூபாய் ரொக்கம், 296 கிலோ வெள்ளி, 23 வெளிநாட்டு கரன்சி ஆகியவை இருந்தது.