ஆற்றில் நடராஜர் சிலை
ADDED :2993 days ago
காரியாபட்டி: காரியாபட்டி தோனுகால் அருகே குண்டாறு உள்ளது. ஆற்றுப்பாலம் அருகே மணல், பாறைகள் எடுக்கபட்டதால், குண்டும் குழியுமாக உள்ளன. அதில் தேங்கி கிடந்த தண்ணீரில், தோனுகாலை சேர்ந்த சிலர் குளிக்க சென்றனர். அப்போது, பழங்கால ஒரு அடி உயரமுள்ள நடராஜர் வெள்ளி சிலை கண்டெடுத்து, மல்லாங்கிணர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.