உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவிலில் காலையில் யாகம்: மாலையில் மழை: மக்கள் மகிழ்ச்சி

கோவிலில் காலையில் யாகம்: மாலையில் மழை: மக்கள் மகிழ்ச்சி

பள்ளிபாளையம்: புத்துமாரியம்மன் கோவிலில், மழை வேண்டி காலையில் சண்டியாகம் நடந்தது. மழையில் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பள்ளிபாளையம், ஒன்பதாம்படி அருகில், புத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு நேற்று உலக நன்மைக்காகவும், மழை பெய்ய வேண்டியும் சண்டி யாகம் காலை, 6:30 மணி முதல் மதியம், 1:30 மணி வரை நடந்தது. சிறப்பு வாய்ந்த யாகத்தை, ஆறு குருக்கள் அடங்கிய குழுவினர் நடத்தினர். யாகத்தில், 108 மூலிகை பொருட்கள், தானிய வகைகள் போடப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். காலையில் யாகம் நடத்தப்பட்டது, மாலை, 3:00 மணிக்கு மேல் மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். புத்துமாரியம்மன் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜை செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !