உலக நன்மைக்காக கமல பிரம்ம யாகம்
ADDED :3067 days ago
ஓசூர்: கெலமங்கலம் அருகே, உலக நன்மைக்காக, கமல பிரம்மயாகம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தேன்கனிக்கோட்டை தாலுகா, கெலமங்கலம் அடுத்த போடிச்சிப்பள்ளி அருகே மோட்சபுரி பகுதியில், சர்வ சித்தி மகாலட்சுமி கோவில் உள்ளது. இக்கோவிலில், உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்கவும், நேற்று காலை, 10:30 மணி முதல், மதியம், 3:00 மணி வரை, கேரளா மாநிலத்தை சேர்ந்த சுந்தரவடிவேல் சுவாமிகள் தலைமையில், கமல பிரம்மயாகம் நடந்தது. இதையொட்டி, சுவாமிக்கு, 108 கலச பூஜை, சர்வ சக்தி, சர்வலோகரஸ்ன, சர்வ தேவதா வசிய, பஞ்சபூத ஆவாஹன, அஷ்டதிக்பந்தன, அஷ்டலட்சுமி கட்டாக்ச, சர்வ ஜன இஷ்டகார்யார்த்தி என பல சித்தி பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.