உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோலம் கொண்ட அம்மன் கோவிலில் ஆடி திருவிழா

கோலம் கொண்ட அம்மன் கோவிலில் ஆடி திருவிழா

திருவள்ளூர்: திருவள்ளூர், கோலம் கொண்ட அம்மன் கோவிலில், ஆடி திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் அலகு குத்தி, வீதி உலா வந்தனர். திருவள்ளூர், முகமது அலி தெருவில், கோலம் கொண்ட அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆடி இரண்டாவது வார திருவிழா காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. அம்மனுக்கு, சந்தன காப்பு அலங்காரம், விநாயகருக்கு விபூதி காப்பு அலங்காரம் நடந்தது. மறுநாள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு குங்கும காப்பு நிகழ்ச்சியும் நடந்தது.நேற்று முன்தினம், அலகு குத்தும் பக்தர்கள்வீரராகவர் கோவில் குளத்தில் குவிந்தனர். அங்கு பக்தர்களுக்கு அலகு குத்தப்பட்டது. பின், கோலம் கொண்ட அம்மன் வீதியுலா வர, அவருடன், அலகு குத்திய பக்தர்கள் வந்தனர்.மேலும், ஏராளமானோர் அம்மனுக்கு, பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி, நேர்த்திக்கடன் செலுத்தி உடன் வந்தனர். இதில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !