பழநியில் 2வது வின்ச் இன்று மீண்டும் இயக்கம்
ADDED :3088 days ago
பழநி: பழநியில் 2வது வின்ச் பராமரிப்பு பணிகள் முடிந்ததையடுத்து, பக்தர்கள் பயன்பாட்டுக்காக இன்று முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளது. பழநி மலைக் கோயிலுக்கு 3 வின்ச்-கள் இயங்குகின்றன. இதில் 2ம் வின்ச் பராமரிப்பு பணிகளுக்காக ஜூன் 12ல் நிறுத்தப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் வசதிக்காக பெட்டிகளின் இருக்கைகள் விரிவுபடுத்தப்பட்டன. ஜன்னல், கதவுகள் உள்ளிட்டவை மாற்றப்பட்டு, முற்றிலும் புதுப்பொலிவுடன் பெட்டிகள் கரூரில் தயாரிக்கப்பட்டன. கடந்த சில நாட்களாக சோதனை ஓட்டம் நடந்தது. இந்நிலையில் இன்று முதல் பக்தர்கள் பயன்பாட்டுக்காக 2வது வின்ச்சை இயக்க உள்ளதாக கோயில் இணை ஆணையர் செல்வராஜ் தெரிவித்து உள்ளார்.