உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கல்யாண உற்சவம்: சுபத்திரையை கரம் பிடித்த அர்ஜுனன்

திருக்கல்யாண உற்சவம்: சுபத்திரையை கரம் பிடித்த அர்ஜுனன்

திருவள்ளூர்: திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு, அர்ஜுனன் சுபத்திரை திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திருவள்ளூர் அடுத்த, புல்லரம்பாக்கம் கிராமத்தில், திரவுபதி அம்மன் கோவிலில், தீ மிதி திருவிழா, கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, அம்மன் பல்வேறு அலங்காரத்தில், வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். விழாவின் நான்காம் நாளான, நேற்று முன்தினம் அர்ஜுனன், சுபத்திரை திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பின், அர்ஜுனன், சுபத்திரை வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். வரும், 6ம் தேதி, தீ மிதி திருவிழா நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !