வடக்குவாசல் செல்வியம்மன் கோயில் விளக்கு பூஜை
ADDED :3024 days ago
முதுகுளத்துார்:முதுகுளத்துார் வடக்குவாசல் செல்வியம்மன் கோயில் 41 ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு 2008 திருவிளக்கு பூஜை நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யபட்டு, விளக்கு பூஜை நடத்தபட்டது. மாலையில் பக்தர்கள் நேர்த்திகடனாக கூழ் ஊற்றினர். விளக்கு பூஜையை முன்னிட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடந்தது.