வால்பாறை துர்க்கை அம்மனுக்கு ஆடி சிறப்பு பூஜை
ADDED :3091 days ago
வால்பாறை : ஆடிமாத சிறப்பு பூஜையில், துர்க்கை அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வால்பாறை நகர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் காசிவிஸ்வநாதர் ஆலயம் உள்ளது. கோவிலை சுற்றி விநாயகர், விசாலாட்சி, தட்சிணாமூர்த்தி, துர்க்கைஅம்மன் சன்னதி உள்ளது. சன்னதியில் இடது புறம் எழுந்தருளியுள்ள துர்க்கை அம்மனுக்கு நேற்று சிறப்பு அபிேஷக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தது. பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.