பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு மூலமந்திர ஹோமம்
ADDED :3091 days ago
திருவள்ளூர்: விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில், வரும் 4ம் தே தி, மூலமந்திர ஹோமம் நடக் கிறது. திருவள்ளூர், தேவி மீனாட்சி நகரில், 32 அடி உயர விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில், வரும் 4ம் தேதி, மூல நட்சத்திரத்தை முன்னிட்டு, மூலமந்திர ஹோமம் நடக்கிறது. அன்று காலை 9:00 மணி முதல், 10:00 மணி வரை ஹோமம் நடைபெறும். பின், 11:00 மணியளவில், மகா தீபாராதனை நடைபெற உள்ளது.