உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மஹா மாரியம்மன் கோவிலில் சந்தன காப்பு விழா: பக்தர்கள் பால்குடம்

மஹா மாரியம்மன் கோவிலில் சந்தன காப்பு விழா: பக்தர்கள் பால்குடம்

குளித்தலை: கீழவதியம் மஹாமாரியம்மன் கோவிலில், சந்தன காப்பு விழா கோலாகலமாக நடந்தது. குளித்தலை அடுத்த, வதியம் பஞ்சாயத்து, கீழவதியம் மஹா மாரியம்மன், விநாயகர் கோவிலில், சந்தன காப்பு மற்றும் பால்குட விழா நேற்று நடந்தது. முன்னதாக, வதியம் காவிரி ஆற்றில் இருந்து, பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பால்குடம், தீர்த்தக் குடத்தை ஊர்வலமாக எடுத்து வந்து, முக்கிய வீதிகள் வழியாக சென்று, கோவிலை சென்றடைந்தனர். தொடர்ந்து, சிறப்பு அபி?ஷகம், அன்னதானம் நடந்தது. இரவில், சுவாமிகளுக்கு சந்தன காப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. இன்று, கிடா வெட்டுதல், மாவிளக்கு, கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விழா ஏற்பாட்டை, கீழவதியம் பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !