அங்காளம்மன் கோவிலில் ஏகதின லட்சார்ச்சனை
ADDED :3025 days ago
புதுச்சேரி: புதுச்சேரி, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், ஏகதின லட்சார்ச்சனை விழா, வரும் 6ம் தேதி நடக்கிறது. புதுச்சேரி, சின்ன சுப்ராயப்பிள்ளை வீதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், 36ம் ஆண்டு, ஏகதின லட்சார்ச்சனை விழா, வரும் 6ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் காலை 7:00 மணி முதல், இரவு 9:00 மணி வரை, அம்மனுக்கு தொடர்ந்து லட்சார்ச்சனை நடக்கிறது. பங்குபெற விரும்பும் பக்தர்கள், கோவில் அலுவலகத்தில், ரூ. 300 செலுத்தி, முன்பதிவு செய்து கொள்ளுமாறு, கோவில் அறங்காவலர் குழு தலைவர் விஜயகுமார், நிர்வாக அதிகாரி ஜெனார்த்தனன் கேட்டுக் கொண்டுள்ளனர்.