உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி பரப்புதல்

முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி பரப்புதல்

கீழக்கரை: திருப்புல்லாணி அருகே பஞ்சந்தாங்கி கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி விழாவை முன்னிட்டு காப்புகட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று இரவு 7:00 மணியளவில் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. முளைப்பாரிக்கான முத்துபரப்புதல் செய்யப்பட்டு, வருகிற ஆக. 9 அன்று முளைக்கொட்டு உற்சவம் நிறைவுபெறும். ஏற்பாடுகளை பூசாரி நாகராஜ், முருகாண்டி மற்றும் விழாக்குழுவினர் செய்துவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !