ஐயப்பன் கோயில் மண்டல பூஜை
ADDED :3026 days ago
தாண்டிக்குடி, தாண்டிக்குடி பஞ்சகிரீஸ்வரர் ஐயப்பன் கோயில் மண்டல பூஜை நடந்தது. கும்பாபிஷேகம் நிறைவடைந்து 48 வது நாளான நேற்று யாகசாலையில் நவகிரகம், கணபதி, லட்சுமி ஹோமங்கள், கலச பூஜை, பூர்ணாகுதி, வேள்வி நிறைவாகி சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. சந்தனகாப்பு அலங்காரத்தில் ஐயப்பன் காயட்சியளித்த நிலையில் பக்தர்கள் தரிசனம் செய்தனர். முன்னதாக அன்னதானம் நடந்தது.