முனீஸ்வரர் கோயில் பொங்கல் விழா
ADDED :3327 days ago
நரிக்குடி:நரிக்குடி முக்குரோட்டில் ஸ்ரீமுனீஸ்வரர் கோயில் உள்ளது. இக் கோயில் 17 ம் ஆண்டு ஆடி வெள்ளி பொங்கல் விழா கடந்த வாரம் காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. இந்த வாரம் வெள்ளியில் காலையில் ஈஸ்வரன் கோயிலில் தீர்த்தம் எடுத்து வரப்பட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் அன்னதானம் நடந்தது. மாலையில் கோயிலில் பொங்கல் வைக்கப்பட்டு ஸ்ரீ முனீஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது.