உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தங்க குதிரை வாகனத்தில் மதுரை மீனாட்சி அம்மன் உலா

தங்க குதிரை வாகனத்தில் மதுரை மீனாட்சி அம்மன் உலா

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடி முளைக்கொட்டு திருவிழா ஜூலை 25ல் துவங்கி நடைபெற்று வருகிறது.  ஆக.,3 வரை நடைபெறும் விழாவில், மீனாட்சி அம்மன் பஞ்ச மூர்த்திகளுடன் காலை, மாலையில் ஆடி வீதியில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருவார். விழாவின் 8ம் நாளில் தங்க குதிரை வாகனத்தில் அம்மன் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.  ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.  ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !