ராமேஸ்வரம் பர்வதத்தில் ராமநாதசுவாமி, அம்மன் எழுந்தருளல்
ADDED :2987 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கெந்தமாதன பர்வதம் மண்டகப்படியில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஜூலை 17 ல் கொடி ஏற்றத்துடன் ஆடித் திருக்கல்யாண விழா துவங்கியது. ஜூலை 28 ல் சுவாமி, அம்மனுக்கு திருக்கோயிலில் ஆடித் திருக்கல்யாணம் விழா நடந்தது. இதனைதொடர்ந்து 17ம் நாள் விழாவான இன்று, கோயிலில் இருந்து சவாமி, பர்வதவர்த்தினி அம்மன் தங்க கேடயத்தில் எழுந்தருளி, கெந்தமாதன பர்வதம் மண்டகப்படியில் புறப்பாடாகினர். அப்போது வீதி யெங்கும் கூடியிருந்த பக்தர்கள் சுவாமி, அம்மன் தரிசனம் செய்தனர். கோயிலில் இருந்த சுவாமி புறப்பாடனதும் நடை சாத்தப்பட்டது.