சிறுபாக்கத்தில் மழை வேண்டி ஊரணி பொங்கல்
ADDED :3101 days ago
சிறுபாக்கத்தில் பருவமழை பெய்ய வேண்டி
பெண்கள் ஊரணி பொங்கல் வைத்து வழிபட்டனர். சிறுபாக்கத்தில் செல்லியம்மன்
மற்றும் ஆண்டவர் சுவாமி உள்ளது. இங்கு நடப்பாண்டு போதிய பருவமழை
பெய்யவும், உலகில் அமைதி நிலவ வேண்டி, நேற்று முன்தினம் அதிகாலை சிறப்பு
அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 4:00 மணியளவில் ஏராளமான பெண்கள் ஊரணி பொங்கல்
வைத்து வழிபட்டனர்.